Thursday, June 16, 2016

Naatu murugai , sedi murungai cultivation. செடிமுருங்கை மற்றும் நாட்டு முருங்கை சாகுபடி

http://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-25/yield/110210.art 
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-10/yield/120478-25-cent-ground-drumstick-will-give-85000-rupees.art

சடையாண்டி,
செல்போன்: 97913-74087.


முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும்.  ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு... நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.
120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும். இதைத்தவிர முருங்கையில் வேறு பராமரிப்பு தேவையில்லை.’’

பூச்சி, நோய் பராமரிப்பு!
முருங்கையில் பூச்சி, நோய் பற்றி சடையாண்டியின் அனுபவம்...
முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------------

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செடிமுருங்கை

செடிமுருங்கை சாகுபடி பாடம்!

25 சென்ட்நிலத்தில் செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதம் குறித்து கோபாலன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

6 ம் மாதம் முதல் அறுவடை!

‘‘25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.
விதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு,  வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கெனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில்  30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும். 40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியைக் கவாத்து செய்து, ஏற்கெனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால், தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.

25 சென்ட்ல செடிமுருங்கை, விதைப்பிலிருந்து 6-வது மாசத்துல செடிக காய்ப்புக்கு வந்து அடுத்த 6 மாசத்துக்கு மகசூல் கொடுக்குது. மொத்தம் 240 செடிக இருக்கு. செடிக்கு 10 கிலோ கணக்குல 2,400 கிலோ காய்கள் கிடைச்சுது. அதுல ஆயிரத்து 400 கிலோவை, காயா வித்தேன். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய் வீதம் 35 ஆயிரம் ரூபாய் விலை கிடைச்சுது. ஆயிரம் கிலோ காயை, செடியிலயே நல்லா முத்தவிட்டு, அதுல இருந்து நல்ல தரமான முளைப்புத் திறன்மிக்க, செதில்களோடு இருக்கிற விதைகளை எடுத்தேன்.
50 கிலோ கிடைச்சது. விதைப்பு செய்ற முருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமா, 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 25 சென்ட் செடிமுருங்கை சாகுபடியில முதல் போகத்துல மட்டும் மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக, 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கையில நின்னது.

முதல் போக காய்ப்பு முடிஞ்சதும் செடிகளைக் கவாத்து செஞ்சு, இயற்கை உரங்களைக் கொடுத்தோம். அடுத்த 6 மாசத்துல செடிகள் நல்லா வளர்ந்து இப்ப இரண்டாம் போகம் காய்ப்பு தொடங்கியிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம். பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.
புரூட்டோனியா புழுத் தடுப்புமுறை!

செடிமுருங்கையில் புரூட்டோனியா புழுத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க, 500 கிராம் பூண்டு, 20 கிராம் மிளகு, தலா அரை கிலோ நொச்சி, எருக்கன், வேம்பு, காட்டாமணக்கு இலைகளை உரலில் போட்டு இடித்து, இதனுடன் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் கலந்து 3 நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இதனை வடிகட்டி, 200 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
 ------------------
ஊதுபத்தி அளவுள்ள  பிஞ்சுகளைத் தேர்வு செய்து சுமார் ஒரு வாரம் நிழலில் காயவைத்து, மொறுமொறுப்புத் தன்மை வந்தவுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவேளை பசும்பாலில் இந்த பவுடர் 2 ஸ்பூன் அளவு கலந்து 5 மாதங்களுக்கு குடித்தால், சிறுநீரக நோய்கள் குணமாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வெண்புள்ளி நோய் போன்றவை குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
---------------------------

விதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு! 

முருங்கைச்செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்கவேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத் தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்கவேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

விதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்’’ என்கிறார் ஆசைத்தம்பி தொடர்புக்கு, ஆசைத்தம்பி செல்போன்: 96983-69927
--------------------------------------


-தொடர்புக்கு,
கோபாலன்,
செல்போன்: 99424-42993.


-----------------------------------------------------------------------------------------------------------------
இப்படித்தான் செய்யணும் முருங்கை சாகுபடி!

யாழ்ப்பாணம் முருங்கை

http://www.vikatan.com/pasumaivikatan/2016-sep-10/yield/122681-yazhpanam-drumstick-will-give-374-lakh-profit.art

ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன...

“நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.

நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை (குச்சிகளை) வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர், 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யப்போகிறோமோ, அந்த முனையை  அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு,  குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மேல்மண் போட்டு, அதில் போத்து, பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துகளின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.   
பூக்கும் நேரத்தில் பிண்ணாக்கு கரைசல்!

6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பாசிப்பயறு 5 கிலோ, தட்டைப்பயறு 5 கிலோ, கொள்ளுப்பயறு 5 கிலோ, கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு, டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை  இரண்டு நாள் வரை வைத்திருந்து,  ஒரு குழிக்கு 2 லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.
கம்பளிப் பூச்சி தாக்குதலுக்கு வசம்புபொடி கரைசல்!

குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வருடம் ஒருமுறை மழை நேரத்தில், மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும். அதில் கட்டை காய்கள்தான் வரும். காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாது. தவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதனால், கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும். நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்.

 தொடர்புக்கு,
மரியராஜ்,
செல்போன்: 89402 56706.
 

Maango Tree maintanence - கவாத்து... மா மகசூலை அதிகரிக்கும் மந்திரம்..

          அறுவடை முடிஞ்சு ஒரு மழை கிடைச்சதும்... மரத்தைச் சுத்தி கொத்தி விடுவோம். ஆவணி மாசத்துல ஒரு மரத்துக்கு 3 அன்னக்கூடை அளவு எரு கொட்டி, தண்ணீர் பாய்ச்சுவோம். மழை பெய்ஞ்சா மாசத்துக்கு ஒரு தண்ணி கொடுப்போம். மழை இல்லைன்னா மாசத்துக்கு 3 முறை தண்ணி கொடுப்போம். மார்கழி மாசம் பூ எடுக்கும். அந்த சமயத்துல  தண்ணி கொடுக்கக் கூடாது. தை மாசத்திலிருந்து தண்ணி கொடுக்கணும். இப்படி பராமரிச்சா சித்திரையில அறுவடைக்கு வந்துடும்.
-----------------------------------------------------------------

‘‘மா மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதும், பூச்சி மற்றும் உரமேலாண்மையும்தான் விளைச்சலுக்கு அடிப்படையாக உள்ளன. டிசம்பர் மாதம் வாக்கில் மா மரம் நிறைய பூக்கள் இருக்கும். இந்த சமயத்தில் தவறியும் கூட, பாசனம் செய்துவிடக்கூடாது. தண்ணீர் பாசனம் செய்தால், மரத்தில் உள்ள பூக்கள் அத்தனையும் கொட்டிவிடும். சில சமயம் டிசம்பர் மாதங்களில் மழை பெய்துவிடும். அந்த ஆண்டு கவனித்துப் பார்த்தால், மா விளைச்சல் குறைந்திருக்கும். பிப்ரவரி மாத கடைசியில் பூக்கள் கோலிகுண்டு அளவு காயாக மாறும். இதன் பிறகு மா மரங்களுக்கு நன்றாக நீர்ப் பாசனம் செய்யலாம். இதைத்தான், ‘தைப்பூ தரையில், மாசிப்பூ மரத்தில்’ என்று சொல்லி வைத்தார்கள்.

மா மரத்துக்கு இயற்கை உரங்களை, ஆகஸ்ட் மாதம் வாக்கில் கொடுத்தால்தான், அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும். மரத்துக்கு  50 கிலோ என்ற அளவில் மட்கிய தொழுவுரத்தைக் கொடுக்க வேண்டும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்தால், பூச்சி-நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில், மா இலைகளிலும், பூக்களிலும் கருப்பு மை பூசியது போல இருக்கும். இது பூஞ்சணத்தால் உருவாகும் நோய். இதைக் கட்டுப்படுத்த எளிய வழி உள்ளது. ஒரு கிலோ மைதா மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, பசைப் போல காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 25 லிட்டர் தண்ணீர் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவும். இளம் மரங்கள் என்றால், ஒரு ஏக்கருக்கு இந்த அளவு போதுமானது. இப்படி தெளிப்பதால், பூஞ்சணம், மைதா பசையில் ஒட்டிக் கொள்ளும். சூரிய ஒளி பட்டவுடன், மைதா பசையுடன் பூஞ்சணமும் காய்ந்து, உதிர்ந்துவிடும். இந்த பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், அடுத்த ஆண்டு ஒரு மரத்தில் 100 கிலோ வரை மாம்பழங்களை நீங்கள் அறுவடை செய்ய முடியும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 93805-33376.

Pruning Techniques

http://agritech.tnau.ac.in/horticulture/cm-mango-eng.pdf

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123664-how-to-increase-yield.art

“மா மரங்களைப் பொறுத்தவரைக்கும் கவாத்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. மரத்தின் அனைத்துக் கிளைகளிலும், அனைத்து இலைகளிலும் வெயில் படவேண்டும். காற்று உள்ளே போய், வெளியேறும் அளவுக்குக் கிளைகளுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும். முதிர்ந்த பழைய கிளைகளையும், தேவையில்லாத இலைகளையும் மரத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் சத்துக்கள் விரயமாகும். நடவில் இருந்து மா மரங்களை ஆண்டுதோறும் முறையாகக் கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூலை எடுக்கலாம். கவாத்து என்றால் சில கிளைகளை வெட்டிவிடுவது என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால், உண்மையில் பழைய கிளைகளை வெட்டி, புதிதாக மூன்று கிளைகளை உருவாக்குவதன் மூலம் மகசூலை இரட்டிப்பாக்கும் மந்திரம்தான் கவாத்து.

 இளங்கன்றிலிருந்தே கவாத்து!

இளஞ்செடிகளைத் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வளரவிட்டு, தண்டுப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் வெட்டிவிட வேண்டும். அந்த இடத்தில், புதிதாகப் பல கிளைகள் உருவாகும். அதில், நல்ல தரமான கிளைகளாக நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற கிளைகளைக் கவாத்துச் செய்து விடவேண்டும். இந்த நான்கு கிளைகளையும் ஒரு மீட்டர் வளரவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அவற்றில் இருந்து புதிதாக வரும் கிளைகளில், தரமான மூன்றை மட்டும் அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மரத்திற்குச் சரியான வடிவம் கிடைக்கும்.

பூக்காத கிளைகளை வெட்ட வேண்டும்!

மா மரங்களைப் பொறுத்தவரை, தரையில் இருந்து மூன்று மீட்டருக்கு மேல்தான் கிளைகள் பிரிய வேண்டும். தரையை நோக்கி வளரும் எந்தக் கிளையையும் அனுமதிக்கக் கூடாது. தரையை நோக்கிப் படரும் கிளைகளில் அதிகப் பூக்கள், காய்கள் வரும். அதற்கு ஆசைப்பட்டு, அந்தக் கிளைகளை வெட்ட யோசித்தால், மற்ற கிளைகள் மூலமாகக் கிடைக்கும் மகசூலை இழக்க நேரிடும். அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்கும் என்பது தவறான தகவல். ஆண்டுதோறும் அனைத்து கிளைகளும் பூக்காது. நடப்பாண்டில் பூக்காத கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பூத்து, மகசூல் கொடுத்த கிளை இந்த ஆண்டுப் பூக்காது. அந்தக் கிளைகள் சூம்பிப் போய்க் கறுப்பு நிறத்தில் இருக்கும். அந்தக் கிளைகளின் நுனிப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் சில மொக்குகள் இருக்கும். அந்த மொக்குகளை விட்டுவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அதிகபட்சமாக   செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்துக்குள் கவாத்துச் செய்துவிடவேண்டும். வழக்கமாக, டிசம்பர் மாதத்தில் கொளுந்து எடுத்து, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாவில் பூ இறக்கும். அதனால், செப்டம்பர் மாதத்தில் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார், செந்தூர்குமரன்.
தொடர்புக்கு,
முனைவர் செந்தூர்குமரன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.
தொலைபேசி: 04577 264288


மா சாகுபடியில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பூச்சியினம், தண்டுத் துளைப்பான். இப்புழுத்தாக்குதலுக்கு உள்ளாகும் மா மரங்கள் அப்படியே பட்டுப்போய்விடும். இதுகுறித்துப் பேசிய செந்தூர்குமரன், “தண்டுத் துளைப்பான் என்பது ஒருவகைப் பூச்சி இனம். இதன் நான்கு பருவங்களில் புழுப் பருவம்தான் மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது, மா மரத்தின் தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்டுக்குள் துளைபோட்டு, உள்ளே சென்றுவிடும். மரங்களுக்கு மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொடுக்கும் சைலம், உள்தண்டைச் சுற்றி தசை போலப் படர்ந்திருக்கும். தண்டுக்குள் செல்லும் புழு, இந்தச் சைலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கும். நாளாக நாளாக, மஞ்சளும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் சைலம் திசுக்கள் இறந்து கறுப்பு நிறத்தூளாக மாறிவிடும். இதனால், மண்ணில் இருந்து மரங்களுக்குச் சத்துக்கள் போவது தடைப்படும். சத்துக்கள் இல்லாமல் ஒவ்வொரு கிளையாகப் பட்டுப்போக ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த மரமும் பட்டுப்போய்க் கீழே விழுந்துவிடும். இரண்டு புழுக்கள் உள்ளே போனாலே போதும்... 30 வயதான பெரிய மரத்தைக் கூடச் சாய்த்துவிடும்.

பொதுவாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் அதிகம் தாக்கும். மரத்தின் தூர்ப் பகுதியில், ஆட்கள் நுழைய முடியாதபடி அடர்த்தியாக உள்ள மரங்கள், தரையைத் தொடும் கிளைகள் உள்ள மரங்கள், தூர்ப் பகுதியில் காய்ந்த இலைகள், குப்பைகள் உள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் தேர்ந்தெடுக்கும். தண்டுத் துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் பட்டை, முதலைத் தோல் போல வெடிப்பு வெடிப்பாகக் காணப்படும். மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து மரத்தூள் வெளியேறி இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கண்டு கொள்ளலாம். தண்டுத் துளைப்பான்... ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் முட்டையிடும்.

தண்டுத் துளைப்பான் தாய் அந்துப்பூச்சி, மா மரங்களின் அடித்தண்டுகளில் இருக்கும் பட்டை களுக்கு இடையில் முட்டை போடும். ஒரு பூச்சி சராசரியாக 12 முதல் 15 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் ஏழு நாட்களில், அதிகபட்சமாக 7 முட்டைகள் வரை பொரிக்கும். இந்த முட்டைகளில் இருந்து வெளியே வரும் புழுக்கள்தான் மோசமானவை. இந்தப் புழுக்கள் 70 நாட்கள் முதல் 105 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், பிரவுன் நிறத் தலையுடன் இந்தப் புழுக்கள் இருக்கும். இந்தத் தலைதான், அரவை இயந்திரம். தலை மூலம் தண்டுப் பகுதியைக் குடைந்து கொண்டே செல்லும். இது ஒரே இடத்தில் குகை போலக் குடையாமல், ‘ஜிக் ஜாக்’ முறையில் குடைந்து கொண்டே செல்லும். அதனால் இதனை மரத்தில் கண்டுபிடிப்பது கடினமான விஷயம். புழுப் பருவம் முடிந்து, கூட்டுப்புழுப் பருவத்தில் 19 முதல் 34 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். அதற்கு மேல் வளர்ந்த பூச்சியாகக் கூட்டை விட்டு வெளியே வரும் பூச்சி, மரங்களுக்கு அருகில் உள்ள காய்ந்த இலைகள், குப்பைகளில் குடியேறி இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபடும்” என்ற செந்தூர்குமரன், தடுக்கும் முறைகள் குறித்தும் சொன்னார்.

தடுப்பது எப்படி?


“மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில்தான் தண்டுத் துளைப்பான் முட்டை போடும். மரத்தைத் தட்டிப்பார்த்து, பட்டையை உரித்துப் பார்த்தால் உள்ளே சைலத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புழுக்களைக் காண முடியும். அந்தப் புழுக்களை எடுத்துவிட்டு, தண்டுப் பகுதி முழுக்க, முந்திரி எண்ணெயைத் தடவ வேண்டும். பட்டையை உரித்துவிட்டு, தரையிலிருந்து மூன்று அடி உயரம் வரை... ஒரு லிட்டர் கோல்தாருடன், இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்தும் தடவி விடலாம். மா மரங்களைக் கவாத்துச் செய்வதற்கு இதுதான் ஏற்ற தருணம். செப்டம்பர் மாதத்துக்குள் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார்.

குப்பைமேனிக் கலவை!
ரசாயன விவசாயிகள் கவாத்துச் செய்த இடத்தில் ‘போர்டோ’ கலவையைப் பூசி விடுவார்கள். ஆனால், ‘போர்டோ கலவைக்கு மாற்றாகக் குப்பைமேனி கலவையைப் பயன்படுத்தலாம். இரண்டு மடங்கு குப்பைமேனி இலை, தலா ஒரு மடங்கு மாட்டுச் சிறுநீர், மண்புழு குளியல் நீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கிளறினால், குப்பைமேனிக் கலவை தயார். இக்கலவையை வெட்டுப்பட்ட இடங்களில் பூசினால் பூசணம் பிடிக்காது.

கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்!
“கவாத்துச் செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப் பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மழை நீர் உள்ளே இறங்காது. கவாத்துச் செய்து முடித்தவுடன், வெட்டுப் பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும். முறையான கவாத்து இல்லாத மரங்களில் பூச்சித்தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக மா மரங்களின் வில்லனான தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். முக்கியமாக கவாத்துச் செய்யும்போது, அதிகக் கிளைகளை வெட்டி விடக்கூடாது. மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் வைத்து, கவாத்துச் செய்ய வேண்டும். அதேபோல மாந்தோப்பில் இலவ மரங்களும், முந்திரி மரங்களும் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார், செந்தூர்குமரன்.