Tuesday, September 25, 2012

பணம் குவிக்கும் பனை , பேரிச்சம் பனை

 கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரத்தின் அடிபடையில் பார்த்தல் 2.5 ஏக்கரில்  வருடர்த்திற்கு 30,00,000 ரூபாய்  வருவாதாக தெரிகிறது .

     200 மரம் X  50 கிலோ = 10000 கிலோ . கிலோ 300 ரூபாய் என்றால் என்றால் , 10000 X 300 = 30,00,000 .

    Thirty km from Coimbatore, on a two-and-a-half-acre farm in Vanjipalayam, a farmer tends to date palms 10 feet high. Two hundred palms grow in neat rows, each boxed in by thin sprinkler pipes and separated from each other by eight meters. While the trees stand barren now, barely a month ago, each was laden with 50 to 80 kg of shiny yellow dates, nicknamed ‘honey balls’.
Bite into one and its crunchy flesh gives way to a wholesome sweetness quite unlike familiar sun-dried dates. They’re officially named Barhi dates and their cultivator, K.G. Murugavel is among the few to organically grow them in South India.
Murugavel’s family have been farmers in Tirupur district for three generations. He was one too until the garment industry lured him away. Twenty years later, industry hardships led to losses and Murugavel returned to agriculture. Only this time, he chose Barhi dates over his family’s traditional turmeric crops. “During my travels to promote garment exports, I heard of Barhi dates. They were originally found in Israel and are valued for their medicinal properties that can relieve joint and muscle pains,” says Murugavel.
Tissue culture saplings
Barhi saplings are today cultivated through tissue culture and are available primarily in the Gulf nations. In February 2009, Murugavel imported 200 saplings from the U.A.E and planted them on his farm. “Growing tissue culture plants is a little like looking after test-tube babies. They need extra care,” says Murugavel.
Each sapling is sown in a hole first filled with organic manure, ash and sand. They are distanced such that an acre holds no more than 60 saplings. Sprinklers are placed below the canopy of the palm and they are watered once in three days. Neem cakes and other organic manures are applied once every three months.
Murugavel is meticulous about his methods of cultivation and says turning organic was an unquestioned choice. “The most successful farmers today are organic ones. Look at any organic palm and there’s a life in it that the same plant, grown inorganically, won’t have,” he says.
Murugavel adds that he’s taught himself the techniques of Barhi cultivation, primarily through the Internet. With his 12th standard education, he runs a comprehensive website detailing his business. Murugavel’s efforts gave fruit within 28 months of planting, a time-period he calls unusually fast for Barhi dates.
In the first year, his palms grew to a height of eight feet and bore 20 kg each. The yield doubled in the second year. When in full maturity, the palms reach 20 meters and are estimated to yield 200-300 kg each. Barhi dates are harvested annualy in July and August. This year, each kg cost Rs. 300 and Murugavel’s entire produce was sold out within September.
“Barhi dates require no processing. They are plucked at three stages of ripeness, packed in plastic containers and sold at our farm gate. We haven’t tied up with any retail organisation yet,” he says. Murugavel’s clients are primarily from Tamil Nadu. “Erode, Avinashi, Palani and Coimbatore are just a few km away so people come all the way and pick them up.” Hotels in Coimbatore too are Murugavel’s customers since they say his dates are import quality.
Training farmers
Outside Murugavel’s whitewashed home sit rows of imported saplings, each worth Rs. 3,300. They are meant for the 20 farmers he’s training across Tamil Nadu in organic Barhi cultivation. Murugavel works with them till their first harvest, teaching them the nuances of planting, pollination and pest control.
“Barhi grows well in soils that can host the palm family, such as coconut trees. The sapling is also well-suited for 30-40 degree temperatures. Our land has both and the market for Barhi in India is growing,“ he says.
For now, Murugavel’s is one of the few families in Tirupur returning to agriculture from the garment industry. It’s a trend he hopes will grow.

Wednesday, September 5, 2012

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்ப...

ூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

நம்மாழ்வாரின் , இயற்கை வாழ்வியல் பயிற்சி

இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற செப்டம்பர் மாதம் 14.9.2012 முதல் 16.9.2012 ஆகிய 3 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செ...
ய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல்
மூலம் பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.தங்குமிடம், உணவு இலவசம்.

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 94880 55546
பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.