அறுவடை முடிஞ்சு ஒரு மழை கிடைச்சதும்... மரத்தைச் சுத்தி கொத்தி விடுவோம்.
ஆவணி மாசத்துல ஒரு மரத்துக்கு 3 அன்னக்கூடை அளவு எரு கொட்டி, தண்ணீர்
பாய்ச்சுவோம். மழை பெய்ஞ்சா மாசத்துக்கு ஒரு தண்ணி கொடுப்போம். மழை
இல்லைன்னா மாசத்துக்கு 3 முறை தண்ணி கொடுப்போம். மார்கழி மாசம் பூ
எடுக்கும். அந்த சமயத்துல தண்ணி கொடுக்கக் கூடாது. தை மாசத்திலிருந்து
தண்ணி கொடுக்கணும். இப்படி பராமரிச்சா சித்திரையில அறுவடைக்கு வந்துடும்.
-----------------------------------------------------------------
‘‘மா மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதும், பூச்சி மற்றும் உரமேலாண்மையும்தான் விளைச்சலுக்கு அடிப்படையாக உள்ளன. டிசம்பர் மாதம் வாக்கில் மா மரம் நிறைய பூக்கள் இருக்கும். இந்த சமயத்தில் தவறியும் கூட, பாசனம் செய்துவிடக்கூடாது. தண்ணீர் பாசனம் செய்தால், மரத்தில் உள்ள பூக்கள் அத்தனையும் கொட்டிவிடும். சில சமயம் டிசம்பர் மாதங்களில் மழை பெய்துவிடும். அந்த ஆண்டு கவனித்துப் பார்த்தால், மா விளைச்சல் குறைந்திருக்கும். பிப்ரவரி மாத கடைசியில் பூக்கள் கோலிகுண்டு அளவு காயாக மாறும். இதன் பிறகு மா மரங்களுக்கு நன்றாக நீர்ப் பாசனம் செய்யலாம். இதைத்தான், ‘தைப்பூ தரையில், மாசிப்பூ மரத்தில்’ என்று சொல்லி வைத்தார்கள்.
மா மரத்துக்கு இயற்கை உரங்களை, ஆகஸ்ட் மாதம் வாக்கில் கொடுத்தால்தான், அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும். மரத்துக்கு 50 கிலோ என்ற அளவில் மட்கிய தொழுவுரத்தைக் கொடுக்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்தால், பூச்சி-நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில், மா இலைகளிலும், பூக்களிலும் கருப்பு மை பூசியது போல இருக்கும். இது பூஞ்சணத்தால் உருவாகும் நோய். இதைக் கட்டுப்படுத்த எளிய வழி உள்ளது. ஒரு கிலோ மைதா மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, பசைப் போல காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 25 லிட்டர் தண்ணீர் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவும். இளம் மரங்கள் என்றால், ஒரு ஏக்கருக்கு இந்த அளவு போதுமானது. இப்படி தெளிப்பதால், பூஞ்சணம், மைதா பசையில் ஒட்டிக் கொள்ளும். சூரிய ஒளி பட்டவுடன், மைதா பசையுடன் பூஞ்சணமும் காய்ந்து, உதிர்ந்துவிடும். இந்த பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், அடுத்த ஆண்டு ஒரு மரத்தில் 100 கிலோ வரை மாம்பழங்களை நீங்கள் அறுவடை செய்ய முடியும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 93805-33376.
Pruning Techniques
http://agritech.tnau.ac.in/horticulture/cm-mango-eng.pdf
http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123664-how-to-increase-yield.art
“மா மரங்களைப் பொறுத்தவரைக்கும் கவாத்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. மரத்தின் அனைத்துக் கிளைகளிலும், அனைத்து இலைகளிலும் வெயில் படவேண்டும். காற்று உள்ளே போய், வெளியேறும் அளவுக்குக் கிளைகளுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும். முதிர்ந்த பழைய கிளைகளையும், தேவையில்லாத இலைகளையும் மரத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் சத்துக்கள் விரயமாகும். நடவில் இருந்து மா மரங்களை ஆண்டுதோறும் முறையாகக் கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூலை எடுக்கலாம். கவாத்து என்றால் சில கிளைகளை வெட்டிவிடுவது என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால், உண்மையில் பழைய கிளைகளை வெட்டி, புதிதாக மூன்று கிளைகளை உருவாக்குவதன் மூலம் மகசூலை இரட்டிப்பாக்கும் மந்திரம்தான் கவாத்து.
இளங்கன்றிலிருந்தே கவாத்து!
இளஞ்செடிகளைத் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வளரவிட்டு, தண்டுப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் வெட்டிவிட வேண்டும். அந்த இடத்தில், புதிதாகப் பல கிளைகள் உருவாகும். அதில், நல்ல தரமான கிளைகளாக நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற கிளைகளைக் கவாத்துச் செய்து விடவேண்டும். இந்த நான்கு கிளைகளையும் ஒரு மீட்டர் வளரவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அவற்றில் இருந்து புதிதாக வரும் கிளைகளில், தரமான மூன்றை மட்டும் அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மரத்திற்குச் சரியான வடிவம் கிடைக்கும்.
பூக்காத கிளைகளை வெட்ட வேண்டும்!
மா மரங்களைப் பொறுத்தவரை, தரையில் இருந்து மூன்று மீட்டருக்கு மேல்தான் கிளைகள் பிரிய வேண்டும். தரையை நோக்கி வளரும் எந்தக் கிளையையும் அனுமதிக்கக் கூடாது. தரையை நோக்கிப் படரும் கிளைகளில் அதிகப் பூக்கள், காய்கள் வரும். அதற்கு ஆசைப்பட்டு, அந்தக் கிளைகளை வெட்ட யோசித்தால், மற்ற கிளைகள் மூலமாகக் கிடைக்கும் மகசூலை இழக்க நேரிடும். அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்கும் என்பது தவறான தகவல். ஆண்டுதோறும் அனைத்து கிளைகளும் பூக்காது. நடப்பாண்டில் பூக்காத கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பூத்து, மகசூல் கொடுத்த கிளை இந்த ஆண்டுப் பூக்காது. அந்தக் கிளைகள் சூம்பிப் போய்க் கறுப்பு நிறத்தில் இருக்கும். அந்தக் கிளைகளின் நுனிப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் சில மொக்குகள் இருக்கும். அந்த மொக்குகளை விட்டுவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அதிகபட்சமாக செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்துக்குள் கவாத்துச் செய்துவிடவேண்டும். வழக்கமாக, டிசம்பர் மாதத்தில் கொளுந்து எடுத்து, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாவில் பூ இறக்கும். அதனால், செப்டம்பர் மாதத்தில் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார், செந்தூர்குமரன்.
மா சாகுபடியில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பூச்சியினம், தண்டுத்
துளைப்பான். இப்புழுத்தாக்குதலுக்கு உள்ளாகும் மா மரங்கள் அப்படியே
பட்டுப்போய்விடும். இதுகுறித்துப் பேசிய செந்தூர்குமரன், “தண்டுத்
துளைப்பான் என்பது ஒருவகைப் பூச்சி இனம். இதன் நான்கு பருவங்களில் புழுப்
பருவம்தான் மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது, மா மரத்தின்
தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து,
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்டுக்குள் துளைபோட்டு, உள்ளே சென்றுவிடும்.
மரங்களுக்கு மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொடுக்கும் சைலம்,
உள்தண்டைச் சுற்றி தசை போலப் படர்ந்திருக்கும். தண்டுக்குள் செல்லும் புழு,
இந்தச் சைலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கும். நாளாக நாளாக,
மஞ்சளும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் சைலம் திசுக்கள் இறந்து
கறுப்பு நிறத்தூளாக மாறிவிடும். இதனால், மண்ணில் இருந்து மரங்களுக்குச்
சத்துக்கள் போவது தடைப்படும். சத்துக்கள் இல்லாமல் ஒவ்வொரு கிளையாகப்
பட்டுப்போக ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த மரமும் பட்டுப்போய்க்
கீழே விழுந்துவிடும். இரண்டு புழுக்கள் உள்ளே போனாலே போதும்... 30 வயதான
பெரிய மரத்தைக் கூடச் சாய்த்துவிடும்.
பொதுவாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் அதிகம் தாக்கும். மரத்தின் தூர்ப் பகுதியில், ஆட்கள் நுழைய முடியாதபடி அடர்த்தியாக உள்ள மரங்கள், தரையைத் தொடும் கிளைகள் உள்ள மரங்கள், தூர்ப் பகுதியில் காய்ந்த இலைகள், குப்பைகள் உள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் தேர்ந்தெடுக்கும். தண்டுத் துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் பட்டை, முதலைத் தோல் போல வெடிப்பு வெடிப்பாகக் காணப்படும். மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து மரத்தூள் வெளியேறி இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கண்டு கொள்ளலாம். தண்டுத் துளைப்பான்... ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் முட்டையிடும்.
தண்டுத் துளைப்பான் தாய் அந்துப்பூச்சி, மா மரங்களின் அடித்தண்டுகளில் இருக்கும் பட்டை களுக்கு இடையில் முட்டை போடும். ஒரு பூச்சி சராசரியாக 12 முதல் 15 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் ஏழு நாட்களில், அதிகபட்சமாக 7 முட்டைகள் வரை பொரிக்கும். இந்த முட்டைகளில் இருந்து வெளியே வரும் புழுக்கள்தான் மோசமானவை. இந்தப் புழுக்கள் 70 நாட்கள் முதல் 105 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், பிரவுன் நிறத் தலையுடன் இந்தப் புழுக்கள் இருக்கும். இந்தத் தலைதான், அரவை இயந்திரம். தலை மூலம் தண்டுப் பகுதியைக் குடைந்து கொண்டே செல்லும். இது ஒரே இடத்தில் குகை போலக் குடையாமல், ‘ஜிக் ஜாக்’ முறையில் குடைந்து கொண்டே செல்லும். அதனால் இதனை மரத்தில் கண்டுபிடிப்பது கடினமான விஷயம். புழுப் பருவம் முடிந்து, கூட்டுப்புழுப் பருவத்தில் 19 முதல் 34 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். அதற்கு மேல் வளர்ந்த பூச்சியாகக் கூட்டை விட்டு வெளியே வரும் பூச்சி, மரங்களுக்கு அருகில் உள்ள காய்ந்த இலைகள், குப்பைகளில் குடியேறி இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபடும்” என்ற செந்தூர்குமரன், தடுக்கும் முறைகள் குறித்தும் சொன்னார்.
தடுப்பது எப்படி?
“மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில்தான் தண்டுத் துளைப்பான் முட்டை போடும். மரத்தைத் தட்டிப்பார்த்து, பட்டையை உரித்துப் பார்த்தால் உள்ளே சைலத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புழுக்களைக் காண முடியும். அந்தப் புழுக்களை எடுத்துவிட்டு, தண்டுப் பகுதி முழுக்க, முந்திரி எண்ணெயைத் தடவ வேண்டும். பட்டையை உரித்துவிட்டு, தரையிலிருந்து மூன்று அடி உயரம் வரை... ஒரு லிட்டர் கோல்தாருடன், இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்தும் தடவி விடலாம். மா மரங்களைக் கவாத்துச் செய்வதற்கு இதுதான் ஏற்ற தருணம். செப்டம்பர் மாதத்துக்குள் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார்.
குப்பைமேனிக் கலவை!
ரசாயன விவசாயிகள் கவாத்துச் செய்த இடத்தில் ‘போர்டோ’ கலவையைப் பூசி
விடுவார்கள். ஆனால், ‘போர்டோ கலவைக்கு மாற்றாகக் குப்பைமேனி கலவையைப்
பயன்படுத்தலாம். இரண்டு மடங்கு குப்பைமேனி இலை, தலா ஒரு மடங்கு மாட்டுச்
சிறுநீர், மண்புழு குளியல் நீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கிளறினால்,
குப்பைமேனிக் கலவை தயார். இக்கலவையை வெட்டுப்பட்ட இடங்களில் பூசினால்
பூசணம் பிடிக்காது.
கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்!
“கவாத்துச் செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக்
கத்தரியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது.
கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப் பக்கத்தில்
இருப்பது போல் கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மழை நீர் உள்ளே
இறங்காது. கவாத்துச் செய்து முடித்தவுடன், வெட்டுப் பாகத்தில் குப்பைமேனிக்
கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும். முறையான கவாத்து இல்லாத
மரங்களில் பூச்சித்தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக மா மரங்களின்
வில்லனான தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். முக்கியமாக
கவாத்துச் செய்யும்போது, அதிகக் கிளைகளை வெட்டி விடக்கூடாது. மரத்தின்
வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் வைத்து, கவாத்துச் செய்ய
வேண்டும். அதேபோல மாந்தோப்பில் இலவ மரங்களும், முந்திரி மரங்களும்
வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார், செந்தூர்குமரன்.
-----------------------------------------------------------------
‘‘மா மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதும், பூச்சி மற்றும் உரமேலாண்மையும்தான் விளைச்சலுக்கு அடிப்படையாக உள்ளன. டிசம்பர் மாதம் வாக்கில் மா மரம் நிறைய பூக்கள் இருக்கும். இந்த சமயத்தில் தவறியும் கூட, பாசனம் செய்துவிடக்கூடாது. தண்ணீர் பாசனம் செய்தால், மரத்தில் உள்ள பூக்கள் அத்தனையும் கொட்டிவிடும். சில சமயம் டிசம்பர் மாதங்களில் மழை பெய்துவிடும். அந்த ஆண்டு கவனித்துப் பார்த்தால், மா விளைச்சல் குறைந்திருக்கும். பிப்ரவரி மாத கடைசியில் பூக்கள் கோலிகுண்டு அளவு காயாக மாறும். இதன் பிறகு மா மரங்களுக்கு நன்றாக நீர்ப் பாசனம் செய்யலாம். இதைத்தான், ‘தைப்பூ தரையில், மாசிப்பூ மரத்தில்’ என்று சொல்லி வைத்தார்கள்.
மா மரத்துக்கு இயற்கை உரங்களை, ஆகஸ்ட் மாதம் வாக்கில் கொடுத்தால்தான், அதன் பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும். மரத்துக்கு 50 கிலோ என்ற அளவில் மட்கிய தொழுவுரத்தைக் கொடுக்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்தால், பூச்சி-நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில், மா இலைகளிலும், பூக்களிலும் கருப்பு மை பூசியது போல இருக்கும். இது பூஞ்சணத்தால் உருவாகும் நோய். இதைக் கட்டுப்படுத்த எளிய வழி உள்ளது. ஒரு கிலோ மைதா மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, பசைப் போல காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 25 லிட்டர் தண்ணீர் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவும். இளம் மரங்கள் என்றால், ஒரு ஏக்கருக்கு இந்த அளவு போதுமானது. இப்படி தெளிப்பதால், பூஞ்சணம், மைதா பசையில் ஒட்டிக் கொள்ளும். சூரிய ஒளி பட்டவுடன், மைதா பசையுடன் பூஞ்சணமும் காய்ந்து, உதிர்ந்துவிடும். இந்த பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், அடுத்த ஆண்டு ஒரு மரத்தில் 100 கிலோ வரை மாம்பழங்களை நீங்கள் அறுவடை செய்ய முடியும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 93805-33376.
Pruning Techniques
http://agritech.tnau.ac.in/horticulture/cm-mango-eng.pdf
http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123664-how-to-increase-yield.art
“மா மரங்களைப் பொறுத்தவரைக்கும் கவாத்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. மரத்தின் அனைத்துக் கிளைகளிலும், அனைத்து இலைகளிலும் வெயில் படவேண்டும். காற்று உள்ளே போய், வெளியேறும் அளவுக்குக் கிளைகளுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும். முதிர்ந்த பழைய கிளைகளையும், தேவையில்லாத இலைகளையும் மரத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் சத்துக்கள் விரயமாகும். நடவில் இருந்து மா மரங்களை ஆண்டுதோறும் முறையாகக் கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூலை எடுக்கலாம். கவாத்து என்றால் சில கிளைகளை வெட்டிவிடுவது என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால், உண்மையில் பழைய கிளைகளை வெட்டி, புதிதாக மூன்று கிளைகளை உருவாக்குவதன் மூலம் மகசூலை இரட்டிப்பாக்கும் மந்திரம்தான் கவாத்து.
இளங்கன்றிலிருந்தே கவாத்து!
இளஞ்செடிகளைத் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வளரவிட்டு, தண்டுப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் வெட்டிவிட வேண்டும். அந்த இடத்தில், புதிதாகப் பல கிளைகள் உருவாகும். அதில், நல்ல தரமான கிளைகளாக நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற கிளைகளைக் கவாத்துச் செய்து விடவேண்டும். இந்த நான்கு கிளைகளையும் ஒரு மீட்டர் வளரவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அவற்றில் இருந்து புதிதாக வரும் கிளைகளில், தரமான மூன்றை மட்டும் அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மரத்திற்குச் சரியான வடிவம் கிடைக்கும்.
பூக்காத கிளைகளை வெட்ட வேண்டும்!
மா மரங்களைப் பொறுத்தவரை, தரையில் இருந்து மூன்று மீட்டருக்கு மேல்தான் கிளைகள் பிரிய வேண்டும். தரையை நோக்கி வளரும் எந்தக் கிளையையும் அனுமதிக்கக் கூடாது. தரையை நோக்கிப் படரும் கிளைகளில் அதிகப் பூக்கள், காய்கள் வரும். அதற்கு ஆசைப்பட்டு, அந்தக் கிளைகளை வெட்ட யோசித்தால், மற்ற கிளைகள் மூலமாகக் கிடைக்கும் மகசூலை இழக்க நேரிடும். அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்கும் என்பது தவறான தகவல். ஆண்டுதோறும் அனைத்து கிளைகளும் பூக்காது. நடப்பாண்டில் பூக்காத கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பூத்து, மகசூல் கொடுத்த கிளை இந்த ஆண்டுப் பூக்காது. அந்தக் கிளைகள் சூம்பிப் போய்க் கறுப்பு நிறத்தில் இருக்கும். அந்தக் கிளைகளின் நுனிப்பகுதியில் பச்சை மறையும் இடத்தில் சில மொக்குகள் இருக்கும். அந்த மொக்குகளை விட்டுவிட்டு, கவாத்துச் செய்ய வேண்டும். அதிகபட்சமாக செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்துக்குள் கவாத்துச் செய்துவிடவேண்டும். வழக்கமாக, டிசம்பர் மாதத்தில் கொளுந்து எடுத்து, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாவில் பூ இறக்கும். அதனால், செப்டம்பர் மாதத்தில் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார், செந்தூர்குமரன்.
தொடர்புக்கு,
முனைவர் செந்தூர்குமரன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.
தொலைபேசி: 04577 264288
முனைவர் செந்தூர்குமரன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.
தொலைபேசி: 04577 264288
பொதுவாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் அதிகம் தாக்கும். மரத்தின் தூர்ப் பகுதியில், ஆட்கள் நுழைய முடியாதபடி அடர்த்தியாக உள்ள மரங்கள், தரையைத் தொடும் கிளைகள் உள்ள மரங்கள், தூர்ப் பகுதியில் காய்ந்த இலைகள், குப்பைகள் உள்ள மரங்களைத்தான் தண்டுத் துளைப்பான் தேர்ந்தெடுக்கும். தண்டுத் துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் பட்டை, முதலைத் தோல் போல வெடிப்பு வெடிப்பாகக் காணப்படும். மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து மரத்தூள் வெளியேறி இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கண்டு கொள்ளலாம். தண்டுத் துளைப்பான்... ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் முட்டையிடும்.
தண்டுத் துளைப்பான் தாய் அந்துப்பூச்சி, மா மரங்களின் அடித்தண்டுகளில் இருக்கும் பட்டை களுக்கு இடையில் முட்டை போடும். ஒரு பூச்சி சராசரியாக 12 முதல் 15 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் ஏழு நாட்களில், அதிகபட்சமாக 7 முட்டைகள் வரை பொரிக்கும். இந்த முட்டைகளில் இருந்து வெளியே வரும் புழுக்கள்தான் மோசமானவை. இந்தப் புழுக்கள் 70 நாட்கள் முதல் 105 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், பிரவுன் நிறத் தலையுடன் இந்தப் புழுக்கள் இருக்கும். இந்தத் தலைதான், அரவை இயந்திரம். தலை மூலம் தண்டுப் பகுதியைக் குடைந்து கொண்டே செல்லும். இது ஒரே இடத்தில் குகை போலக் குடையாமல், ‘ஜிக் ஜாக்’ முறையில் குடைந்து கொண்டே செல்லும். அதனால் இதனை மரத்தில் கண்டுபிடிப்பது கடினமான விஷயம். புழுப் பருவம் முடிந்து, கூட்டுப்புழுப் பருவத்தில் 19 முதல் 34 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். அதற்கு மேல் வளர்ந்த பூச்சியாகக் கூட்டை விட்டு வெளியே வரும் பூச்சி, மரங்களுக்கு அருகில் உள்ள காய்ந்த இலைகள், குப்பைகளில் குடியேறி இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபடும்” என்ற செந்தூர்குமரன், தடுக்கும் முறைகள் குறித்தும் சொன்னார்.
தடுப்பது எப்படி?
“மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில்தான் தண்டுத் துளைப்பான் முட்டை போடும். மரத்தைத் தட்டிப்பார்த்து, பட்டையை உரித்துப் பார்த்தால் உள்ளே சைலத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புழுக்களைக் காண முடியும். அந்தப் புழுக்களை எடுத்துவிட்டு, தண்டுப் பகுதி முழுக்க, முந்திரி எண்ணெயைத் தடவ வேண்டும். பட்டையை உரித்துவிட்டு, தரையிலிருந்து மூன்று அடி உயரம் வரை... ஒரு லிட்டர் கோல்தாருடன், இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்தும் தடவி விடலாம். மா மரங்களைக் கவாத்துச் செய்வதற்கு இதுதான் ஏற்ற தருணம். செப்டம்பர் மாதத்துக்குள் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்” என்றார்.
குப்பைமேனிக் கலவை!
கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்!
No comments:
Post a Comment