http://www.vikatan.com/pasumaivikatan/2015-sep-25/yield/110210.art
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-10/yield/120478-25-cent-ground-drumstick-will-give-85000-rupees.art
சடையாண்டி,
செல்போன்: 97913-74087.
முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு... நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.
120-ம் நாளுக்குள் செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும். இதைத்தவிர முருங்கையில் வேறு பராமரிப்பு தேவையில்லை.’’
பூச்சி, நோய் பராமரிப்பு!
முருங்கையில் பூச்சி, நோய் பற்றி சடையாண்டியின் அனுபவம்...
முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------------
25 சென்ட்நிலத்தில் செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதம் குறித்து கோபாலன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...
6 ம் மாதம் முதல் அறுவடை!
‘‘25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.
விதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கெனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில் 30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும். 40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியைக் கவாத்து செய்து, ஏற்கெனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால், தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.
25 சென்ட்ல செடிமுருங்கை, விதைப்பிலிருந்து 6-வது மாசத்துல செடிக காய்ப்புக்கு வந்து அடுத்த 6 மாசத்துக்கு மகசூல் கொடுக்குது. மொத்தம் 240 செடிக இருக்கு. செடிக்கு 10 கிலோ கணக்குல 2,400 கிலோ காய்கள் கிடைச்சுது. அதுல ஆயிரத்து 400 கிலோவை, காயா வித்தேன். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய் வீதம் 35 ஆயிரம் ரூபாய் விலை கிடைச்சுது. ஆயிரம் கிலோ காயை, செடியிலயே நல்லா முத்தவிட்டு, அதுல இருந்து நல்ல தரமான முளைப்புத் திறன்மிக்க, செதில்களோடு இருக்கிற விதைகளை எடுத்தேன்.
50 கிலோ கிடைச்சது. விதைப்பு செய்ற முருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமா, 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 25 சென்ட் செடிமுருங்கை சாகுபடியில முதல் போகத்துல மட்டும் மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக, 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கையில நின்னது.
முதல் போக காய்ப்பு முடிஞ்சதும் செடிகளைக் கவாத்து செஞ்சு, இயற்கை உரங்களைக் கொடுத்தோம். அடுத்த 6 மாசத்துல செடிகள் நல்லா வளர்ந்து இப்ப இரண்டாம் போகம் காய்ப்பு தொடங்கியிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம். பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.
புரூட்டோனியா புழுத் தடுப்புமுறை!
செடிமுருங்கையில் புரூட்டோனியா புழுத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க, 500 கிராம் பூண்டு, 20 கிராம் மிளகு, தலா அரை கிலோ நொச்சி, எருக்கன், வேம்பு, காட்டாமணக்கு இலைகளை உரலில் போட்டு இடித்து, இதனுடன் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் கலந்து 3 நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இதனை வடிகட்டி, 200 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
------------------
ஊதுபத்தி அளவுள்ள பிஞ்சுகளைத் தேர்வு செய்து சுமார் ஒரு வாரம் நிழலில் காயவைத்து, மொறுமொறுப்புத் தன்மை வந்தவுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவேளை பசும்பாலில் இந்த பவுடர் 2 ஸ்பூன் அளவு கலந்து 5 மாதங்களுக்கு குடித்தால், சிறுநீரக நோய்கள் குணமாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வெண்புள்ளி நோய் போன்றவை குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
---------------------------
விதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு!
முருங்கைச்செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்கவேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத் தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்கவேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.
விதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்’’ என்கிறார் ஆசைத்தம்பி தொடர்புக்கு, ஆசைத்தம்பி செல்போன்: 96983-69927
--------------------------------------

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செடிமுருங்கை
செடிமுருங்கை சாகுபடி பாடம்!25 சென்ட்நிலத்தில் செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதம் குறித்து கோபாலன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

-தொடர்புக்கு,
கோபாலன்,
செல்போன்: 99424-42993.
ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன...
“நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.
நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை (குச்சிகளை) வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர், 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யப்போகிறோமோ, அந்த முனையை அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு, குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மேல்மண் போட்டு, அதில் போத்து, பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.
நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துகளின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.
கோபாலன்,
செல்போன்: 99424-42993.
-----------------------------------------------------------------------------------------------------------------
இப்படித்தான் செய்யணும் முருங்கை சாகுபடி!
யாழ்ப்பாணம் முருங்கை
http://www.vikatan.com/pasumaivikatan/2016-sep-10/yield/122681-yazhpanam-drumstick-will-give-374-lakh-profit.art
ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன...
“நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.
நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை (குச்சிகளை) வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர், 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யப்போகிறோமோ, அந்த முனையை அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு, குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மேல்மண் போட்டு, அதில் போத்து, பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.
நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துகளின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.
பூக்கும் நேரத்தில் பிண்ணாக்கு கரைசல்!
6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பாசிப்பயறு 5 கிலோ, தட்டைப்பயறு 5 கிலோ, கொள்ளுப்பயறு 5 கிலோ, கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு, டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை இரண்டு நாள் வரை வைத்திருந்து, ஒரு குழிக்கு 2 லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

கம்பளிப் பூச்சி தாக்குதலுக்கு வசம்புபொடி கரைசல்!
குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வருடம் ஒருமுறை மழை நேரத்தில், மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும். அதில் கட்டை காய்கள்தான் வரும். காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாது. தவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதனால், கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும். நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்.

தொடர்புக்கு,
மரியராஜ்,
செல்போன்: 89402 56706.
மரியராஜ்,
செல்போன்: 89402 56706.