Tuesday, May 3, 2016

water melon இயற்கை தர்பூசணி..

http://www.vikatan.com/pasumaivikatan/2016-mar-25/yield/116801-organic-water-melon-gave-71-thousand-earnings.art

தொடர்புக்கு,
ஜேசு,
செல்போன்: 90475-05575.

தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி செய்யும் விதம் குறித்து, ஜேசு சொன்ன விஷயங்கள் இங்கே..
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம்.

 நிலத்தை நன்றாக உழுது, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ ஆட்டு எருவை மேல் மண்ணுடன் கலந்து நிரப்பி குழிக்கு 4 விதைகள் விதம் விதைத்து பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசன வசதி இல்லாத விவசாயிகள், 8 அடி இடைவெளியில் வாய்க்கால் எடுத்து, வாய்க்காலின் உள்கரையில் 2 அடி இடைவெளியில், (‘ஜிக்ஜாக்’) குறுக்கு நெடுக்கு முறையில் விதைகளை நடவு செய்யலாம்.

விதைகளை பஞ்சகவ்யாவில் அரைமணிநேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் அரைமணி நேரம் பாசனம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கும். 15-ம் நாள் களைகளை அகற்ற வேண்டும். 17, 19 மற்றும் 21-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் கால் லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும்.

25-ம் நாளுக்கு மேல் தர்பூசணிக் கொடி படரத் தொடங்கும். அதற்குப் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக 4 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்தால் போதுமானது. 25, 29, 33 மற்றும் 37-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் அரை லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும். 30-ம் நாள் ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தர்பூசணி இலைகள் மீது தெளிக்க வேண்டும். 32-ம் நாள் இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 38-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 39-ம் நாள் 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 2 லிட்டர் வடிகட்டிய ‘வராஹ குணப’த்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதற்குப்பிறகு இடுபொருட்கள் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூத்து பிஞ்சுகள் உருவாகும். 65 முதல் 70 நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.
ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது 10 டன் வரை மகசூல் கிடைக்கும். தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது 15 டன் வரை மகசூல் எடுக்கலாம்.


மயில் தொல்லையை சமாளிப்பது எப்படி?

“10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ மீன்கழிவுகளைப் போட்டு, இரண்டு நாட்கள் ஊற வைத்தால், துர்நாற்றம் அதிகமாக வீசும். இதனை வேலி ஓரத்தில் தெளித்து வந்தால், மயில், ஆடு மாடுகள் பயிரின் அருகில் வராது. தர்பூசணிக்கு மட்டுமல்ல. நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்குமே இதை மேற்கொள்ளலாம்” என்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆதிநாரயணன்.

No comments:

Post a Comment