Tuesday, July 14, 2015

வாழை விவசாயம் குறித்த தகவல்கள்

               
 வாழை விவசாயம் குறித்த தகவல்களின் தொகுப்பு .

திசு வாழை நடவு முறை :
சணப்பின் நிழலில் வாழை!
வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
அதேபோல, தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.
9 அடி இடைவெளி!
வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

 கூன் வண்டு கட்டுப்பாடு :

        நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால்... அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.
ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும்

Irrigation :
http://agritech.tnau.ac.in/expert_system/banana/irrigationmanagement.html

No comments:

Post a Comment