http://www.srdsindia.org/
Tuesday, July 28, 2015
Sunday, July 19, 2015
Native variety seed banks contacts in Tamilnadu . விதைகளை காத்துவருவர்பவர்கள்
விதைகளை காத்துவருவர்பவர்களையும் விவசாயிகளையும் ஒருங்கிணைப்பு
ஏற்படுத்துவது மட்டுமே வானகத்தின் நோக்கம். இந்த விதைகள் வாழ்வியலுக்காக
பயன்படுத்தவும். வியாபரத்திற்காக அல்ல. எனவே விதைகளின் தரம் விதைகளை
வாங்குபவர்கள் , பெறுபவர்கள் பொறுப்பு. நிர்வாகம் பொறுப்பல்ல.
1. வானகம் விதை வங்கி,
கடவூர், கரூர். தொடர்புக்கு : செந்தில் 8489750624
காட்டுக்கம்பு, இருங்கு சோளம், காடைக்கன்னி, கொள்ளு மற்றும் பல சிறுதானிய விதைகள் போன்ற பல விதைகளை பரிமாற்றம் செய்ய சேவை விதைகள் மட்டுமே அளிக்கப்படும்.
நேரில் வந்து மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்.
2. பாண்டியன் , விழுப்புரம், காய்கறி & கீரை விதைகள் .
தொடர்பு எண் : 7811897510
3. உசேன், தேனி. அன்னாஞ்சி தக்காளி எண் : 9751221716
4. மருதையப்பன், கடவூர் , கரூர்.
சிறுதானிய விதைகள் எண் : 9489174665
5. தேன்கனி உழவர் வார சந்தையின் இயற்கை விவசாயிகள்,
விருது நகர் மாவட்டம்.
** ஜெயமணி, சிவகாசி. எண் : 99529 65181
காட்டுக்கம்பு, குதிரைவாலி, திணை , எள்
** கா. கருணாகரன், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
எண் : 90472 73009
பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, பூங்கார், கருத்தகார், சேலம் சன்னா, சீரகசம்பா, கருங்குறுவை, வெள்ளைப் பொன்னி, நாட்டுத்துவரை ( மரத்துவரை ), அறுபதாம் குறுவை, கருப்புக் கவுணி,
** கணேஷ் குமார் : கோவில்பட்டி .
கருங்கன்னி நாட்டு பருத்தி எண் : 8098851621
6. ராஜ வேந்தன், திருவண்ணாமலை, காட்டுயானம் நெல்
எண் : 9840151012
7. சரோஜா, பள்ளபட்டி, கரூர், எண் : 94894 34551
ஆமணக்கு, தட்டைப் பயறு, கொள்ளு,
8. கீரை விதைகள் ,
உயர்திரு. மா.ராமசாமி, திருவண்ணாமலை. எண் : 04175 226742
9. காந்தி கடலை ( நிலக்கடலை )
திருக்குறள் விவசாயப் பண்ணை, வேலூர் மாவட்டம்.
கைபேசி : 98941 43061
10. பரமேஸ்வரன் , ஒட்டன்சத்திரம் ,
காய்கறி & கீரைகள் எண் : 8973982739
11. ரோஸ் தொண்டு நிறுவனம், புதுக்கோட்டை
சிறுதானியங்கள் . எண் : 9842093143
12. ராஜேஷ், நாகப்பட்டினம், பாரம்பரிய நெல் விதைகள்
எண் : 8608193966
13. ரமேஷ், தெற்கு காட்டூர், ராம நாதபுரம்,
பூங்கார் நெல், எண் : 9443861558
14. கிருஷ்ணன், இராம நாதபுரம், சண்டிகார் நெல் : 887072155
15. அங்கம்மாள், பனம்பட்டி, புதுக்கோட்டை .
ஆலவயல் கத்தரி : 960030737
16. ரகுபதி, வேலூர்.
வெங்காயம், கருணைக்கிழங்கு, ஆலவயல் கத்தரி, பாசிப்பய்று , பூ வகை : 9843772130
17. சிவா, ராமநாதபுரம்
சுரை, நீள புடலை , நீள பாகல், நீள பீர்க்கன், சுரை, பாலையூர் கத்தரி, : 9489274427
18. இராஜமாணிக்கம் , இராம நாதபுரம்.
பாண்டியூர் கத்தரி . எண் : 9629942364
19. நடராஜன் , இராம நாதபுரம்.
நாட்டு கத்தரி வகைகள் எண் : 9629947364
20. எழில் நடராஜன் . சின்ன சேலம்
கருப்புக்கவுணி, மாப்பிள்ளை சம்பா எண் : 9443236851
21. சீனு பரமேசுவரன் , புதுச்சேரி.
ஆழ்வார் குறுவை. எண் : 9360214387
22. க. திணேஷ் பாபு, தலைவாசல் .
கந்தசாலா, நவரா , பாரம்பரிய நெல் எண் : 9489144845
23. கேசவன், மதுரை. எண் : 9940965170
பாசிப்பயறு, காய்கறி விதைகள்
24. சந்திரசேகர், திருப்பூர் . எண் : 9994566624
சிகப்பு வெண்டை, காடைக்கன்னி சிறுதானியம்
இது போல நீங்களோ அல்லது உங்கள் பகுதியிலும் யாரவது பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வருவார்களே யெனில் உங்கள் தகவலை இங்கு பகிரலாம். Karuppasamy2k09@gmail.com என்கிற மின்ன்ஞ்சலுக்கு தமிழில் தகவல் அனுப்பலாம்.

Wednesday, July 15, 2015
மழை நீர் சேகரித்து காடு வளர்ப்பவர்.
தமிழில் தி இந்து நாளிதழில் வந்த செய்தி.
Sathasivam 9843014073
தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி
‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.

இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம்.
நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை
மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம்
ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.
புதுமை நீர்ப் பாய்ச்சல்
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.
இந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக்கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.
இப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, மனித குலத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கும் சதாசிவம், இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:
மழை இறங்கா மண்
“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.
இது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.
இந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.
15 ஆண்டு கால முயற்சி
ஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
தோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முறை மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்!” என்கிறார்.
செலவில்லை
இந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” - எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார்
இ.ஆர்.ஆர்.சதாசிவம்.
சதாசிவம், தொடர்புக்கு: 9843014073
நன்றி - தமிழில் தி இந்து

Tuesday, July 14, 2015
வாழை விவசாயம் குறித்த தகவல்கள்
வாழை விவசாயம் குறித்த தகவல்களின் தொகுப்பு .
திசு வாழை நடவு முறை :
சணப்பின் நிழலில் வாழை!
வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
அதேபோல, தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.
9 அடி இடைவெளி!
வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
கூன் வண்டு கட்டுப்பாடு :
நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால்... அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.
ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும்
Irrigation :
http://agritech.tnau.ac.in/expert_system/banana/irrigationmanagement.html
Subscribe to:
Posts (Atom)